IQOO நிறுவனம் தனது முதல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய இயர்பட்ஸ் TWS 1s எனும் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் 11mm அதிக ரெசல்யூஷன் கொண்ட Speaker Driver ஐ கொண்டுள்ளது. அத்துடன் டீப் எக்ஸ் 3.0 ஸ்டீரியோ சவுண்ட் எஃபெக்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய IQOO இயர்பட்ஸ் மாடலில் Active noise cancelation வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் Low latency mode வசதி கொண்டுள்ளது. இதனை முழுமையாக charge செய்தால் 42 மணி நேரத்திற்கான Battery backup வழங்குகிறது.
இத்துடன் Fast charging வசதி உள்ளது. இதை கொண்டு பத்து நிமிடங்கள் charge செய்தால் மூன்று மணி நேரம் வரை பயன்படுத்த முடியும். மேலும் டூயல் டிவைஸ் கனெக்ஷன் வசதி உள்ளது. இதில் Bluetooth 5.3, கூகுள் பாஸ்ட் பேர், Google Assistant, Touch control வசதி என்பனவும் உள்ளது.
IQOO TWS 1c மாடலின் விலை இந்திய ரூபா. 1,899 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் ஃபிளேம் மஞ்சல் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் ஆகஸ்ட் 23 ஆம் தேதியிலிருந்து ஆரம்பிக்கிறது.