வடக்கு மாகாண பொதுச்சேவையின் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2021 Open Competitive Examination for Recruitment to Grade III of Rural Development Officer in Northern Province – 2021
வடக்கு மாகாண பொதுச்சேவையின் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் Rural Development Officer தரம் III இல் காணப்படும் 05 பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சையானது வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் அவர்களால் நடாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி 07.05.2021 ஆகும்.
சம்பள அளவுத்திட்டம் :
பொதுநிர்வாகச் சுற்றறிக்கை 03/2016 க்கு அமைவான, சம்பளத் தொகுதி MN 4- 2016 க்கு ஏற்ப கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் தரம் – III ற்கான திரட்டிய சம்பள விகிதமானது ரூபா 31, 490 – 10 x 445 – 11 x 660 – 10 x 730- 5 x 750 – 54, 250/- ஆகும். (ரூபா 32,825 சம்பள படிநிலைக்கு முன் முதலாவது வினைத்திறமைகாண் தடைப் பரீட்சையில் சித்தி பெறல் வேண்டும்)
கல்வித் தகைமைகள் –
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து பெற்றுக்கொண்ட பல்கலைக்கழகப் பட்டம்.
அத்துடன்
க.பொ.த (உ/த) பரீட்சையில் ஒரே அமர்வில் பழைய பாடத்திட்டமாயின் நான்கு (04) பாடங்கள் புதிய பாடத்திட்டமாயின் மூன்று (03) பாடங்கள் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
கீழே தரப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கமைவாக A4 அளவிலான (21செ.மீ.x29செ.மீ) தாளின் 1 முதல் 11 வரையான பந்திகள் முதலாம் பக்கத்திலும் ஏனையவை மறு பக்கத்திலும் உள்ளடங்கும் வண்ணம் விண்ணப்பப் படிவத்தைத் தயாரித்தல் வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை 07.05.2021ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு, “செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடக்கு மாகாணம், இல:393/48, கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்” எனும் முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பி வைத்தல் வேண்டும்.