Monday, April 26, 2021

Inland Revenue Service உள்நாட்டு இறைவரி சேவை தரம் III ஆட்சேர்ப்பு

Open Competitive Examination for Recruitment to Grade III of the Sri Lanka Inland Revenue Service – 2019 (2020)



இலங்கை உள்நாட்டு இறைவரிச் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2019 /2020 தொடர்பாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்

2020 மார்ச் 06 ஆம் திகதி 2166 இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட மேற்படி பரீட்சையின் பாடத்திட்டங்கள் திருத்தப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு 2021 மார்ச் 05 ஆம் திகதிய 2218 ஆம் இலக்க வர்த்தமானியைப் பார்வையிடவும். என அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி திருத்தம்

இலங்கை உள்நாட்டு இறைவரிச் சேவையின் Inland Revenue Service III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2019/2020

2020, மாச்சு மாதம் 01 ஆந் திகதிய 2166 ஆம் இலக்க வர்த்தமானப் பத்திரத்தில் வெளியிடப்பட்ட “இலங்கை உள்நாட்டு இறைவரில் சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்யும் திறந்த போட்டிப் பரீட்சை 2019/2020” அறிவித்தல் பின்வருமாறு திருத்தம் செய்யப்படுகின்றது.

1, விண்ணப்பம் கோரும் அறிவித்தலின் இலக்கம் 7.1.1 இல் விடய இலக்கம் 01 – “கிரகித்தல்” தலைப்பின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள பகுதி நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள பகுதியை உட்சேர்ப்பதற்கும் மற்றும் காலத்தை 1 1/2 மணித்தியாலங்களாகத் திருத்தம் செய்வதற்கும்,

” இவ்வினாப்பத்திரம் விண்ணப்பதாரியின் கிரசித்தல் மற்றும் சரியான தொடர்பாடல் ஆற்றலை அளவிடுவதற்காகத் தயாரிக்கப்படுகின்ற ஆவணப் பயிற்சிகள் மற்றும் பொழிப்புப்படுத்தல் ஆற்றலை அளவிடுவதற்காகத் தயாரிக்கப்பட்ட வினாக்களைக் கொண்டிருக்கும். வினாக்கள் அனைத்திற்கும் விடையளித்தல் வேண்டும்.

II. விண்ணப்பம் கோரும் அறிவித்தலின் இலக்கம் 7.1.1 இல் விடய இலக்கம் – 03 “பொது அறிவு” தலைப்பின் கீழ் இறுதியில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பகுதியை உட்சேர்ப்பதற்கும் மற்றும் காலத்தை 1 மணித்தியாலம் எனத் திருத்தம் செய்வதற்கும்,

“இந்த வினாப்பத்திரம் பல்தேர்வு மற்றும் சுருக்கமான விடைகளை வழங்கும் வகையிலான வினாக்களை மாத்திரம் கொண்டிருக்கும்.”

இவ்வாறு குறித்த வர்த்தமானியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கைபரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்