பயிற்சிக்கு பயிலுனர்களை ஆட்சேர்ப்பதற்கான நேர்முகப்பரீட்சை – 2021
இலக்கம் 2230 மற்றும் 2021.05.28 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய துணை மருத்துவ சேவையின் பல் தொழிநுட்பவியலாளர் பயிற்சிக்கு பயிலுனர்களை ஆட்சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சை – 2021
இப்பதவிக்காக விண்ணப்பித்துள்ளவர்களது தகைமைகளை பரிசீலிப்பதற்கான நேர்முகப் பரீட்சை தொடர்பான பின்வரும் தகவல்கள் சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
1. நேர்முகப் பரீட்சை நடைபெறும் இடம், திகதி, நேரம் மற்றும் நேர்முகப் பரீட்சை சபைகளின் எண்ணிக்கை விண்ணப்பதாரிகளின் பெயர் பட்டியல் என்பவற்றை குறிப்பிடும் ஆவணம்.
2. நேர்முகப் பரீட்சைக்கான அழைப்பு கடிதம்.
பட்டியலில் பெயர் உள்ளவர்களுக்கு நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புகடிதம் எதிர்காலத்தில் அனுப்பிவைக்கப்படும் எனவும், ஏதாவது காரணத்தினால் அக்கடிதம் கிடைக்கப் பெறாவிடினும், மேலே ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி நேர்முகப்பரீட்சைக்கு தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் சுகாதார அமைச்சுக்கு உரியநேரத்தில் சமூகமளிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.