இலங்கை அரசாங்க நூலகர் சேவையின் II ஆம் தரத்தைச் சேர்ந்த அலுவலர்களுக்கான வினைத்திறன் காண் தடை தாண்டல் பரீட்சை – 2018 – 2021
2024/ 35 ஆம் இலக்க 2017.06.21 ஆந் திகதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டவாறான இலங்கை அரசாங்க நூலகர் சேவைப் பிரமாணக் குறிப்பின் 04 ஆம் பின் இணைப்பின் ஏற்பாடுகளுக்கு ஏற்ப இலங்கை அரசாங்க நூலகர் சேவை தரம் II இல் உள்ள அலுவலர்களுக்கான வினைத்திறன் காண் தடை தாண்டல் பரீட்சை – 2021, ஓகத்து மாதம் கொழும்பில் நடாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ் அறிவித்தலின் படி குறித்த வினைத்திறன் காண் தடை தாண்டல் பரீட்சைக்காக அரசாங்க சேவையின் இணைந்த சேவைக்குரிய அலுவலர்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.
குறிப்பு. – இவ் வர்த்தமானி அறிவித்தலுக்கு ஒத்திசைவாக மாகாண அரசாங்க சேவையின் நூலகர் சேவை விண்ணப்பதாரிகளுக்கான ஏற்பாடுகள் உரிய மாகாண அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவினாலும் ஏனைய நிறுவனங்களின் விண்ணப்பதாரிகளுக்கான ஏற்பாடுகள் அவ்வந்த நிறுவனங்களினாலும் வெளியிடப்படவுள்ளது.
“ஒவ்வொரு மாகாண அரசாங்க சேவை மற்றும் ஏனைய நிறுவனங்களிலுள்ள அலுவலர்களின் விண்ணப்பங்களை வசதியாக இனங்காண்பதற்கென விண்ணப்பங்களின் தலைப்பில் உரித்தான சேவைகள் அல்லது நிறுவனத்தினைக் குறிப்பிடும் போது குறியீட்டு இலக்கங்கள் பாவிக்கப்படல் வேண்டும். அதற்கிணங்க “இணைந்த சேவையின் அலுவலர்களுக்கான குறியீட்டு இலக்கம் 10” ஆகும். அவ் இலக்கத்தினை விண்ணப்பத்தின் வலப்பக்க மேல் மூலையில் தாங்களுக்குரிய சேவை என்னும் இடத்தில் குறிப்பிடல் வேண்டும். என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் பரீட்சைக்கான மாதிரி விண்ணப்பப்படிவம் வர்த்தமானியில் வெயிடப்பட்டுள்ளது. பரீட்சார்த்திகள் தமது விண்ணப்பத்தை மாதிரி விண்ணப்பப்படிவத்திற்கமைய சரியாகவும், தெளிவாகவும் தயாரித்து தமது திணைக்களத் தலைவர் ஊடாக பதிவுத் தபாலில் 2021, யூன் மாதம் 14 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடியவகையில் “பரீட்சை ஆணையாளர் நாயகம், ஒழுங்கமைப்பு (நிறுவனம் சார் மற்றும் வெளிநாட்டு பரீட்சைகள்) கிளை, இலங்கை பரீட்சைத் திணைக்களம், த.பெ. இல. 1503, கொழும்பு” எனும் முகவரியைச் சென்றடையும் வண்ணம் அனுப்பி வைத்தல் வேண்டும்.
விண்ணப்பங்ளை பரீட்சை ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பும் போது கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் பரீட்சையின் பெயர் மற்றும் தரம் என்பவற்றைக் குறிப்பிடுதல் வேண்டும்.
