Saturday, August 28, 2021

If the election is won தேர்தலில் தெரிவு செய்யப்பட்டால் - வினாவிடைகள் 4

29) அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் உள்ளூர் அதிகார சபைத் தேர்தல் (Local Government election) ஒன்றில் வேட்பாளர் ஒருவராக போட்டியிட எதிர்பார்ப்பதாயின் அவர் பெற்றுக் கொள்ளக்கூடிய விடுமுறைகள் தொடர்பான ஏற்பாடுகளை தாபன விதிக்கோவை அத்தியாயம் XXXII இன்படி குறிப்பிடுக.



அ) உள்ளூர் அதிகார சபைத் தேர்தல் (Local Government election) ஒன்றில் வேட்பாளர் ஒருவராக போட்டியிட எதிர்பார்ப்பதாயின் அவர் அது தொடர்பில் நியமன பத்திர கையேற்பு திகதிக்கு ஆகக்குறைந்தது ஒரு நாளைக்கு முன்பேனும் திணைக்களத் தலைவருக்கு எழுத்து மூலம் அறிவித்தல் வேண்டும்.

ஆ) அன்றுமுதல் தேர்தல் தினம் (Election Date) வரையிலான கால எல்லை வரை அவருக்கு சம்பளமற்ற லீவு வழங்கப்படல் வேண்டும். எனினும் தேர்தலொன்றில் போட்டியிடுகின்ற அரசியல் உரிமைகள் உள்ள அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் விண்ணப்பிக்கின்ற வருடத்தில், அவருக்குரிய சாதாரண லீவுகளில் இதுவரை, பெற்றுக் கொள்ளப்படாமல் எஞ்சியவையிருப்பின் அவருக்கு அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இ) அவர் பாராளுமன்றத்தின் உறுப்பினரொருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அத்தகைய தேர்தல் தேதியிலிருந்து (Election Date) அவர் அரசாங்க சேவையில் தான் வகித்துக் கொண்டிருக்கின்ற பதவியிலிருந்து கேட்டு விலகுமாறு பணிக்கப்படல் வேண்டும்.

ஈ) அவர் உள்ளூராட்சி நிறுவனமொன்றின் பிரதி நகர முதல்வராக / உப தலைவராக/ நகரசபை உறுப்பினராக/ பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்படின் அவர் வகித்த பதவியில் இருக்கும்போதே உள்ளூராட்சி நிறுவனத்தின் கூட்டங்களில் ஈடுபடுவதற்கு சேவையின் அவசரத் தேவைகளுக்கு அமைவாக மாதமொன்றிற்கு 06 நாட்கள் சம்பளத்துடனான லீவை அவருக்கு வழங்க முடியும்.

உ) அவர் உள்ளூராட்சி நிறுவனமொன்றின் நகர முதல்வர்/ தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் அரசியல் உரிமைகளை கொண்ட உத்தியோகத்தர்களுக்கு மாதமொன்றிற்கு 08 நாட்கள் சம்பளத்துடனான லீவை அவருக்கு வழங்க முடியும். (அரசாங்க நிருவாக சுற்றறிக்கை 12/2021)

30) அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் மாகாண சபையின் ஓர் உறுப்பினராகத் (Provincial Council Member) தெரிவு செய்யப்பட்டால் அவர் அனுபவிக்கக்கூடிய ஏனைய உரிமைகளை குறிப்பிடுக?

அவருக்குப் பின்வரும் விருப்பத் தெரிவுகளில் ஒன்றை அனுபவிக்க இடமளிக்க முடியும்.

1ஆம் விருப்பு – அவர் தொடர்ந்து மாகாணசபை உறுப்பினராக இருக்கும் காலமெல்லாம் சம்பளமற்ற லீவில் (No Pay Leave) அம்மாகாண சபை உறுப்பினராக சேவையாற்றுவதை இயலச் செய்யத்தக்கவாறு முழு அளவில் விடுவிக்கப்படல் வேண்டும்.

2ஆம் விருப்பு – தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குட் பட்டு அரசாங்க சேவையை விட்டகன்றவராகக் கருதப்படல் வேண்டும்.

மாகாண சபை தேர்தலில் (Provincial Council Election) அவர் செய்யப்பட்ட நேரத்தில் அரசாங்க சேவையிலான அவரது நிரந்தரப் பதவி ஓய்வூதியப் பிரமாணக் குறிப்பின் கீழ் ஓய்வூதியமுள்ள ஒரு பதவியாகப் பிரகடனப்படுத்தப் பட்டுள்ள ஒரு பதவியாக இருப்பின், அப்போது

(அ) மாகாண சபை தேர்தலில் (Provincial Council Election) அவர் தெரிவுசெய்யப்பட்ட திகதியன்று பதவி வறிதாக்கப்பட்டமையால் அவர் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வுபெறின் அவருக்கு ஓய்வூதியப் பிரமாணக் குறிப்பின் கீழ் பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ள கொடைகளை பெற்றுக் கொள்வதற்கு அவர் தகைமையுள்ளவராவார்.

(ஆ) எனினும் மாகாண சபையின் உறுப்பினர் பதவி முடிவுற்றமையில் மாகாண சபையின் அவரது சேவை முடிவுறுத்தப்படும் வரை அவ்வோய்வூதியக் கிடைப்பனவுகளை அவருக்கு வழங்கக் கூடாது.

இ) மாகாண சபையின் சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவர் மரணமுறும் சந்தர்ப்பத்தில் அவர் மாகாணசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தினம் தொடக்கம் ஓய்வூதிய நன்மைகளை கொடுப்பனவு செய்தல் வேண்டும்.

ஈ) மாகாண சபை தேர்தலில் (Provincial Council Election) தெரிவுசெய்யப்படுகின்ற சந்தர்ப்பத்தில் அவர் அரசாங்க சேவை ஊழியர் சேமலாப நிதியக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு உதவுதொகை செலுத்தியவராக இருந்திருந்தால் அவர் சேவையிலிருந்து நீக்கப்பட்டமைக்காகவன்றி அரசாங்கத்தின் விருப்பத்தோடு தனது ஒப்பந்தத்தை முடிவுறுத்தியமை காரணமாக அரசாங்க சேவையை விட்டுச் சென்ற ஒருவராகக் கருதப்படல் வேண்டும்.

31) அரசாங்க வேலைத் தளமொன்றில் அரசியல் நடவடிக்கைகள் (Political Activities) நடாத்துதல் தொடர்பாக தாபன விதிக்கோவையின் அத்தியாயம் XXXII கூறப்பட்டுள்ள ஏற்பாடுகளை குறிப்பிடுக?

1) அரசாங்க கட்டிடத்தில் அல்லது வேறு அரசாங்க வேலைத்தளமொன்றில் அரசியல் கூட்டம் (Political Meeting) எதுவும் நடாத்தப்படலாகாது.

2) அரசாங்கக் கட்டிடமொன்றில் திணைக்களத் தலைவரின் அனுமதியுடன் தொழிற்சங்கக் கூட்டமொன்று (Trade Union Meeting) நடாத்தப்படலாம். ஆயினும் அவ்வனுமதி வழங்கப்படுவது, அக்கூட்டத்தில் குறித்த தொழிற்சங்க உறுப்பினர் அல்லாத ஆளெவரும் சமூகமழிக்காதவிடத்து மாத்திரமேயாகும்.

3) அரசாங்க அலுவலகமொன்றிற்குள் எந்தவோர் அரசியல் கட்சிக்கும் வாக்குகளை இரந்து கேட்க அனுமதி வழங்கப்படமாட்டாது.

4) ஏதேனும் அரசாங்க அலுவலகமொன்றிற்குள் அரசியல் பிரசுரங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் (Political Notice) என்பவற்றைப் பகிர்ந்தளிக்கக் கூடாது.

5) அதே போன்று அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அறிவித்தல்கள், ஏனைய சின்னங்கள் என்பன அரசாங்க அலுவலகமொன்றிற்குள் அல்லது அரசாங்கத்தின் வேறேதும் நிறுவனமொன்றிற்குள் காட்சிப்படத்தப்படக்கூடாது.

32) அரசியல் உரிமைகளை அனுபவிக்க உரித்துடைய உத்தியோகத்தரொருவருக்கான இடமாற்றம் தொடர்பான சலுகைகள் யாவை?

அ) அரசியல் உரிமைகளை அனுபவிக்க உரித்துடைய உத்தியோகத்தரொருவர் தலைவர், செயலாளர், பொருளாளர், உப தலைவர், உப செயலாளர், பதவியொன்றை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றின் மத்திய செயற்குழுவில் வகிப்பாராயின், மத்திய செயற்குழுவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடத்திற்கு அண்மையிலுள்ள அலுவலகமொன்றில் சேவையாற்றும் சலுகை அவருக்கு வழங்கப்படல் வேண்டும். அவர் வழக்கமான இடமாற்ற விதிகளுக்கு உட்படவும் மாட்டார்.

ஆ) இச்சலுகையைப் பெற்றுள்ள உத்தியோகத்தரொருவர் செயற்குழுவில் தான் வகிக்கின்ற பதவியை வகிக்காதொழிந்தால் அல்லது ஓர் உயர் பதவிக்கு, வகுப்பிற்கு அல்லது தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டால் வழமையான இடமாற்ற சட்ட விதிகளுக்கு உட்படுவார்.

இ) எப்பொழுதும் இச்சலுகை வழங்கப்பட வேண்டியது பொதுவான திணைக்களத்தின் தேவைப்பாடுகள் மற்றும் ஒழுக்காற்று சட்டவிதிகள் என்பவற்றிற்குட்பட்ட வகையிலாகும்.

ஈ) எவரேனுமோர் உத்தியோகத்தர் இச்சலுகையைப் பெற விரும்புகின்றவிடத்து பின்வருவன உள்ளடக்கப்பட்ட விண்ணப்பமொன்றை திணைக்களத் தலைவருக்கு சமர்ப்பித்தல் வேண்டும்:

மத்திய செயற் குழுவில் தான் வகிக்கின்ற பதவியின் பெயர்;

அரசியல் கட்சியின் பெயரும் முகவரியும் மற்றும்

தான் சேவையாற்ற விரும்புகின்ற சேவை நிலையம்.

உ) அரசியல் உரிமைகளை அனுபவிக்க உரித்துடைய உத்தியோகத்தர் ஒருவர் உள்ளூராட்சி சபை ஒன்றின் உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டால் அவர் தெரிவுசெய்யப் பெற்ற உள்ளூராட்சி சபை அலுவலகத்துக்கு அணித்தாக அமைந்துள்ள ஒரு நிலையத்தில் சேவையாற்றுவதற்கான சலுகை சேவையின் அவசரத் தன்மை ஒழுக்காற்றுத் தேவைகள் என்பவற்றிற்கு அமைய அவருக்கு வழங்கப்படுதல் வேண்டும்.

ஊ) அவர் அந்த உள்ளூராட்சி சபையில் உறுப்பினராகத் தொடர்ந்து தொழிற்படும் காலம்வரை வழக்கமான இடமாற்றங்களுக்கு உட்படமாட்டார்.