Saturday, August 28, 2021

அரசியல் உரிமைகள் (Political rights) வினாவிடைகள் 3

23) தாபன விதிக்கோவை அத்தியாயம் XXXII இன் படி அரசியல் உரிமைகளை (Political rights)அனுபவிக்க உரித்துக் கிடையாத அலுவலர்களை குறிப்பிடுக.



1) நீதித்துறை உத்தியோகத்தரொருவர்

2) ஆயுதப் படைச் சேவைகளின் உத்தியோகத்தரொருவர்

3) பொலீஸ்படை உத்தியோகத்தரொருவரும் குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக் கோவையின்படி பொலீஸ் கடமைகளை நிறைவேற்றுகின்ற ஏனைய சமாதான உத்தியோகத்தரொருவரும் (உ-ம் கிராம சேவை உத்தியோகத்தர்கள் Grama Niladhary)

4) (138ஆம் அத்தியாயமான) தொழிற் சங்கங்கள் கட்டளைச் சட்டத்தின் 20ஆம் பிரிவில் (Trade Union Ordinance) வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ள சிறைச்சாலை உத்தியோகத்தரொருவர் (Prison Officer)

5) அரசாங்க சேவையிலுள்ள பதவிநிலை உத்தியோகத்தரொருவர் அல்லது மேற்பார்வை உத்தியோகத்தரொருவர்; (Staff Grade Officer or Supervising Officer)

6) தேர்தல்கள் திணைக்களத்தில் (பாராளுமன்ற, உள்ளுராட்சி முதலிய) சேவையாற்றுகின்ற உத்தியோகத்தரொருவர் அவர் அதில் சேவையாற்றும் வரை, (Election Department Officer)

24) அரசியல் உரிமைகளை (Political rights) அனுபவிப்பதற்கு உரித்தில்லாத உத்தியோகத்தரொருவர் செய்ய முடியாத அரசியல் சார்ந்த செயற்பாடுகளை குறிப்பிடுக.

அ) சனாதிபதித் தேர்தல் (Presidential Election), பாராளுமன்றத் தேர்தல் (Parliament Election), மக்கள் தீர்ப்பு (Judgment of the People), மாகாண சபைத் தேர்தல் (Provincial Council Election) அல்லது உள்ளூர் அதிகாரசபைத் தேர்தல் (Local Government Election) ஒன்றில் தனது வாக்கினைப் பிரயோகிப்பது தவிர்ந்த வேறெவ்வித அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது.

ஆ) குறிப்பாக கீழ்வரும் விதத்திலான செயன்முறை எதனையும் மேற்கொள்ளல் தடையாகும்.
இதனை மீறுவது பதவிநீக்கம் (Dismissal) செய்யப்படக் கூடிய தண்டனைக்குட்பட வேண்டிய குற்றமொன்றாகும்.

1) சனாதிபதித் தேர்தல் (Presidential Election), பாராளுமன்றத் தேர்தல் (Parliament Election), மக்கள் தீர்ப்பு (Judgment of the People), மாகாண சபைத் தேர்தல் (Provincial Council Election) அல்லது உள்ளூர் அதிகாரசபைத் தேர்தல் (Local Government Election) ஒன்றில் பங்குபற்றுதல்;

2) சனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், மக்கள் தீர்ப்பு, மாகாண சபைத் தேர்தல் அல்லது உள்ளூர் அதிகாரசபைத் தேர்தல் ஒன்றில் போட்டியிடுகின்ற வேட்பாளரொருவருக்கு ஏதேனுமொரு விதத்தில் உதவி புரிதல்;

3) சனாதிபதித் தேர்தல் (Presidential Election), பாராளுமன்றத் தேர்தல் (Parliament Election), மக்கள் தீர்ப்பு (Judgment of the People), மாகாண சபைத் தேர்தல் (Provincial Council Election) அல்லது உள்ளூர் அதிகாரசபைத் தேர்தல் (Local Government Election) ஒன்றில் தான் பெயர் குறித்து நியமனம் செய்யப்படுவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் எடுத்தல்.

25) தாபன விதிக்கோவை அத்தியாயம் XXXII இன் படி அரசியல் உரிமைகளை (Political rights) அனுபவிக்க உரித்துக் கிடையாத அலுவலர்கள் குறித்த விதிமுறைகளை மீறுவதன் காரணமாக வழங்கப்பட வேண்டிய தண்டனைகளை குறிப்பிடுக.

இதனை மீறுவது பதவி நீக்கம் (Dismiss) செய்யப்படக் கூடிய தண்டனைக்குட்பட வேண்டிய குற்றமொன்றாகும்.

26) அரசியல் உரிமைகளை (Political rights) அனுபவிக்க உரித்துக் கிடையாத அலுவலர்கள் எதிர்வரும் காலங்களில் தேர்தலில் போட்டியிட (To Contest Election) எதிர்பார்ப்பார்களாயின் அவர்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை குறிப்பிடுக.

அ) இனிவரும் காலங்களில் தேர்தலில் போட்டியிட முன்னர் அரச சேவையில் தான் வகிக்கின்ற பதவியிலிருந்து இராஜினாமா (Resign to Government Service) செய்தல் வேண்டும்.

ஆ) ஆயினும் 10 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவைக்காலத்தைக் கொண்டுள்ள அத்தகைய உத்தியோகத்தரொருவர் சனாதிபதி, பாராளுமன்ற, மாகாண சபை அல்லது உள்ளுராட்சி தேர்தலில் வேட்பாளர் ஒருவராகப் போட்டியிடுவதாயின், வேட்புமனு ஒப்படைக்கும் திகதிக்கு குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு முன்பு நியமன அதிகாரிக்கு அறிவித்து (Inform to Appointment Authority) தேர்தலுக்கான வேட்புமனுவைக் கையளிப்பதற்கு 07 நாட்களுக்கு முன்பே தான் வகிக்கும் பதவியிலிருந்து ஓய்வு பெறலாம்.

இ) அவ்வாறு ஓய்வு பெறுவதாயின் அவர் அரசிற்கு செலுத்த வேண்டியுள்ள சகல கொடுப்பனவுகளையும் தீர்த்து முடிக்க வேண்டியதுடன், கட்டாய ஒப்பந்த சேவைக் (Compulsory Contract Service) காலமாகவிருப்பின் அதற்காக ஒப்பந்தப் பணத்தைச் செலுத்தி ஒப்பந்தத்திலிருந்து விடுபடுதல் வேண்டும்.

ஈ) அவ்வாறு ஓய்வுபெறும் ஒருவருக்கு அவரது வயது 55 பூர்த்தியாகும் திகதி முதல் ஓய்வூதியமும் பணிக்கொடையும் உரித்தாகும்.

27) அரசியல் உரிமைகளை (Political rights) அனுபவிக்க உரித்துடையவரான அரசாங்க உத்தியோகத்தரொருவருக்கு அனுபவிக்க உரித்துள்ள அரசியல் உரிமைகள் யாவை?

1) அரசியற் கட்சியொன்றில் உறுப்பினராதலும் (Member of Political Party)அக்கட்சி நடவடிக்கைகளில் பங்குபற்றலும்:

2) அரசியல் தன்மையதான விடயமொன்றைப் பற்றி அபிப்பிராயம் தெரிவித்தல் (Expressing an Political Opinion): உ-ம் : அரசியல் விடயங்கள் தொடர்பாக பத்திரிகைகளுக்குக் கடிதம் எழுதுதல் (Letter Writing to News Paper) அல்லது அத்தகைய விடயங்கள் ஆராயப்படுகின்ற கூட்டங்களில் உரையாற்றுதல் (Speech to Political Meeting); அத்துடன்

3) சனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், மக்கள் தீர்ப்பு, மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல் அல்லது உள்ளூர் அதிகாரசபைத் தேர்தலொன்றில் போட்டியிடல். (Competing in an election)

28) அரசியல் உரிமைகளை (Political rights) அனுபவிக்க உரித்துடையவரான அரசாங்க அலுவலர் ஒருவர் குறித்த உரிமைகளை எந்நிபந்தனைகளுக்கு (Condition) உட்பட்ட வகையில் அனுபவிக்க முடியும்?

அ) அரசியற் கட்சியொன்றின் வேலைகளில் பங்குபற்றல்,

ஆ) அரசியல் கூட்டமொன்றில் உரையாற்றல்

முதலியவற்றிற்கான உரிமைகள் அரசாங்க உத்தியோகத்தரொருவருக்கு வழங்கப்படுவது அரசாங்க சேவையில் அவர் ஆற்றுகின்ற வேலைகளுக்கு பங்கம் ஏற்படாத நிலையில் மாத்திரமேயாகும்.

எல்லா வேளைகளிலும் அரசாங்க சேவை நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுதல் வேண்டும்.

இ) சேவையின் அவசர தேவைப்பாடுகட்குட்பட்ட வகையில் திணைக்களத் தலைவரினால் அரசாங்க உத்தியோகத்தர் ஒருவருக்கு அத்தகைய அரசியல் நடவடிக்கைகளில் பங்குபற்றுவதற்காக தனது தற்றுணிபுக்கிணங்க விடுமுறை வழங்கப்படலாம்.

ஈ) சனாதிபதித் தேர்தலொன்றில், பாராளுமன்ற தேர்தலொன்றில், மாகாண சபைத் தேர்தலொன்றில் உத்தியோகத்தரொருவர் வேட்பாளரொருவராக போட்டியிட எதிர்பார்ப்பதாயின், அவர் அதுபற்றி நியமனத் தேதிக்கு குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு முன்னராவது தனது திணைக்களத் தலைவருக்கு எழுத்து மூலம் அறிவித்தல் வேண்டும்.

உ) அவருக்கு நியமனத் தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தொடக்கம் தேர்தல் தேதிவரையான காலத்திற்கு சம்பளமற்ற லீவு வழங்கப்படல் வேண்டும்.

எ) எனினும் உத்தியோகத்தரொருவர் உள்ளூர் அதிகாரசபைத் தேர்தலொன்றில் வேட்பாளர் ஒருவராக போட்டியிட எதிர்பார்ப்பதாயின் அவர் அதுபற்றி நியமனப் பத்திரக் கையேற்பு திகதிக்கு ஆகக்குறைந்தது ஒரு நாளைக்கு முன்பேனும் திணைக்களத் தலைவருக்கு எழுத்து மூலம் அறிவித்தல் வேண்டும்.